ஹைதராபாத் டிடி காலனி வாக்குச்சாவடியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய பிரதேச பொறுப்பாளருமான முரளிதர் ராவ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நம்மைப் போல மக்கள்தொகையும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பையும் உலகில் வேறு எங்கேயும் காண இயலாது என்றார்.
எனவே இந்தியர்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேம்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.