கன்னியாகுமரியில் பாசி மாலைகள் விற்பனை செய்து வந்தவரின் 7 வயது பெண் குழந்தை மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடை சீசன் என்பதால் குமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கடற்கரை பகுதிகளில் பாசி மாலை விற்பனை செய்து வந்த சரஸ்வதி என்பவரின் 7 வயது குழந்தை திடீரென மாயமானது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குழந்தையை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.