ஆந்திராவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கீழே போட்டு உடைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 4-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது இருதரப்பினரிடயே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வாக்கு இயந்திரத்தை கீழே போட்டு உடைத்தார். தகவலறிந்த வந்த போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.