மயிலாடுதுறை அருகே அய்யனார் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மணக்குடி பூர்ணம்பாள் புஷ்களாம்பாள் உடனாகிய அய்யனார் கோவில், கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.