வைகாசி விசாக விழாவை முன்னிட்டு சென்னை, வடபழனி முருகன் கோயிலில் கொடியேற்றும் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
வடபழனி முருகனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவை பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இதையடுத்து சுவாமிக்கும், ஆலய கொடிமரத்திற்கும் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது.
பின்னர் மேள தாளம் முழங்க கொடியேற்றம் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.