சென்னை எண்ணூரில் ரயிலிலிருந்து தவறி விழுந்த மாணவன் தண்டவாளத்துக்கு இடையே சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணூர் காமராஜ் நகரை சேர்ந்த முஹம்மது நபில் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு, கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்க சென்றுள்ளார்.
அந்தவகையில் எண்ணூர் ரயில் நிலையம் வந்தடைந்த முஹம்மது நபில், பொன்னேரி செல்வதற்காக நின்றிருந்த ரயிலில் தவறுதலாக ஏறி அமர்ந்திருந்துள்ளார்.
அப்போது திடீரென கிளம்பிய ரயிலில் இருந்து இறங்க முயற்சித்த முஹம்மது நபில், நடைமேடையின் இடைவெளியில் விழுந்து தண்டவாளத்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.