மயிலாடுதுறை அருகே மழை வேண்டி மகா நவசண்டி யாகம் நடைபெற்றது.
மேலமருதாந்தநல்லூரில் பிரசித்தி பெற்ற அஷ்டாதசபுஜ மகாலெக்ஷ்மி துர்கா பரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் மகா நவசண்டி யாகம் நடைபெற்றது. கோயில் முன்பு யாக குண்டம் அமைக்கப்பட்டு, யாக வேள்வி நடைபெற்றது.
இதில், கொலுசு, மெட்டி பட்டுப்புடவைகள் மற்றும் நவ தானியங்கள் உள்ளிட்ட 235 பொருட்களை தீயில் இட்டு வேள்வி நடைபெற்றது.
பின்னர், அஷ்டாதசபுஜ மகாலெக்ஷ்மி துர்கா பரமேஸ்வரிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.