கன்னியாகுமரி மாவட்டத்தில், திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கோடை வெயில் வாட்டி வந்தது.
இதனால், பகல் நேரத்தில் வெளியே செல்லமுடியாமலும், இரவு நேரத்தில் வீட்டில் தூங்கமுடியாமலும் பொது மக்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில், கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள குலசேகரம், திருவட்டார், மார்தாண்டம் மற்றும் தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.