திருப்பூர் அருகே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால், பல்வேறு இரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
திருப்பூர் மற்றும் கோவையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், பெரும்பாலானோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இரயில் மூலம் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், வஞ்சிபாளையம் இரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் அதிகாலை நேரத்தில் நடைபெற்றதால், கோவை இன்டெர்சிட்டி உள்ளிட்ட ஏராளமான இரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
இதனால், தொழிலாளர்கள் மற்றும் வெளியூர் செல்லபவர்கள் உரிய நேரத்தில் செல்லமுடியாமல் தவித்தனர். இதனால், பயணிகள் நலன்கருதி, இது போன்ற பணிகள், பிற்பகல் நேரத்தில் மேற்கொள்ளவேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.