உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இதையொட்டி இன்று மற்றும் நாளை நடைபெறும் வாகனப் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று ஆதரவு திரட்டுகிறார்.
இந்த வாகனப் பேரணியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி.நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் செய்துள்ளனர்.