ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்க உடனடி அனுமதி கோரி, மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
கோடை வெயிலின் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 45 அடியாக குறைந்துள்ளது.
இந்நிலையில் அணையில் வண்டல் மண் எடுக்க உடனடி அனுமதி வழங்குமாறு, மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
மேலும் அனுமதி வழங்காவிட்டால் வரும் 20-ம் தேதி பவானிசாகர் அணை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.