கோவில்பட்டியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 300 கிலோ பீடி இலைகளை கீயூ பரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவலையடுத்து, கலைஞானபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்றுக்கொண்டிருந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், 44 மூட்டைகளில் சுமார் ஆயிரத்து 300 கிலோ பீடி இலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட சூரியகுமார் என்பவரையும் கைது செய்தனர்.