கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகள் உருக்கும் பணி தொடங்கியுள்ளது.
பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலையில் உள்ள பிரசித்திப்பெற்ற மாசாணியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 32 கிலோ 663 கிராம் நகைகள் தரம் பிரிக்கப்பட்டு, தனித்தனியாக உருக்கும் பணி தொடங்கியுள்ளது.
இந்த உருக்கும் பணி, ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி, அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.