மதுரையில் 3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது பேருந்தின் முன்பு திடீரென பைக் குறுக்கே வந்ததால், ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். இதனால் பின்னால் வந்துகொண்டிருந்த 2 பேருந்துகள் அரசுப் பேருந்து மீது அடுத்தடுத்து மோதியது.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படாத நிலையில், பேருந்துகளின் முன்பகுதி, பின் பகுதி முழுவதும் சேதமடைந்தன.