நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருதகுளத்தை சேர்ந்த சங்கரசுப்பு என்பவர் சொத்து பிரச்சினையின் காரணமாக காவல்நிலையத்தில் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சங்கரசுப்புவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.