ஈரோட்டில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக பயன்படுத்திய 3 இளைஞர்கள் உள்பட 4 பேர் கைதாகி உள்ளனர்.
பெருந்துறையில் போதைப் பொருட்களின் புழக்கம் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக பயன்படுத்திய மனோகரன், சந்துரு உள்பட 3 இளைஞர்களையும், போதைப்பொருள் விற்பனை செய்த, சந்தன ஜனா என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.