தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தத்தால் அருவிகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்ய தொடங்கிய நிலையில், இதனால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குவிந்துள்ளனர்.