வெளிநாடுகளுடன் இந்திய ரூபாயிலேயே வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள பரிசீலித்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைந்து எல்லாம் சீராக நடைபெற்றால், இந்தியா- பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மிக விரைவாக கையொப்பமாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவது குறித்து ஜெய்சங்கர் கருத்து தெரிவிக்கையில், ஐ.நா.வில் சீர்திருத்தம் மேற்கொள்வதையும், பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கும் பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
மேலும் இந்தியா- சீனா எல்லை விவகாரம் குறித்து பேசிய அவர், இந்திய நிலப்பகுதி கடந்த 1958 முதல் 1962-ஆம் ஆண்டு வரை நேருவின் ஆட்சிக்காலத்தில்தான் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், இதற்கு பிரதமர் மோடியை காங்கிரஸ் குற்றம்சாட்டுவது நியாயமல்ல என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.