10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பங்கேற்காத மாணவர்களுக்கு வரும் ஜூலை 2-ஆம் தேதி துணைத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து தேர்வு முடிவுகள் கடந்த 10-ஆம் தேதி வெளியானது. இதில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள், வரும் 16-ஆம் தேதி முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு, ஜூலை 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.