பீகார் முன்னாள் துணை முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி மறைவுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பீகார் முன்னாள் துணை முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பலவேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார்.
அதில் அவர்,
पार्टी में अपने मूल्यवान सहयोगी और दशकों से मेरे मित्र रहे सुशील मोदी जी के असामयिक निधन से अत्यंत दुख हुआ है। बिहार में भाजपा के उत्थान और उसकी सफलताओं के पीछे उनका अमूल्य योगदान रहा है। आपातकाल का पुरजोर विरोध करते हुए, उन्होंने छात्र राजनीति से अपनी एक अलग पहचान बनाई थी। वे… pic.twitter.com/160Bfbt72n
— Narendra Modi (@narendramodi) May 13, 2024
பீகாரில் பாஜகவின் எழுச்சி மற்றும் வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். கட்சியில் எனது மதிப்புமிக்க சக தொண்டரும், பல தசாப்தங்களாக எனது நண்பராக இருந்தவருமான சுஷில் மோடியின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் அதில் பதிவிட்டிருந்தார்.