மும்பையில் புழுதிப்புயலினால் விளம்பரப் பதாகை சரிந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று புழுதிப் புயல் வீசியதோடு, பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
மணிக்கு 50 கிலோ முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசியதால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததோடு, விளம்பரப் பதாகைகள் சரிந்து விழுந்தன.
கட்கோபர் பகுதியில் சுமார் நூறடி உயர இரும்பு விளம்பரப் பதாகை சரிந்து விழுந்ததில், ஏராளமானோர் அடியில் சிக்கிக் கொண்டனர்.
இதில் 14 பேர் பலியாகினர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.