பழனி அருகே ஊராட்சி அலுவலகத்தை பூட்டி சாவியை தர மறுக்கும் ஊராட்சி தலைவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவை சேர்ந்த கண்ணன் என்பவர் பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியின் தலைவராக உள்ளார். இவர் ஊராட்சி அலுவலகத்தை பூட்டி சாவியை தர மறுப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்களால் வரி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து மாவட்ட திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்துள்ளதாகவும் ஊராட்சி செயலர் ஜோதி தெரிவித்துள்ளார்.