மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.
மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி வசந்த உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு விழாவிற்காக அம்பாள் சுவாமி புதுமண்டபத்தில் எழுந்தருளிய நிலையில் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து உட்பிறகாரத்தில் வலம் வந்த மீனாட்சி தாயார், மற்றும் சுவாமிக்கு சிறப்பு தீபாராதணை காட்டப்பட்டது.