மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
அறுபத்துமூவர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி, மாற்றுத்திறனாளியான இவர், அப்பகுதியில் உள்ள சிலரிடம் 3 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.
சில ஆண்டுகள் கழித்து பணத்தை திருப்பி கேட்டபோது அவர்கள் பணத்தை திரும்ப தராமல் மிரட்டி வருவதாக ஜெயந்தி மற்றும் அவரின் கணவர் சிலம்பரசன், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.