நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாலத்தீவுக்கு இந்தியா 50 மில்லியன் டாலரை வட்டியில்லாமல் கடனாக அளித்துள்ளது.
மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் மூசா சமீர் கடந்த வாரம் டெல்லி வந்து, தங்களுக்கு கடனுதவி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில், மத்திய அரசு அந்நாட்டுக்கு உதவியிருக்கிறது.
இது இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும், தக்க தருணத்தில் கடனுதவி செய்த இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் மூசா சமீர் தெரிவித்துள்ளார்.