ஏர் இந்தியா- விஸ்தாரா விமான நிறுவனங்கள் நிகழாண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இணைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குரூப் கடந்த 2022-இல் விலைக்கு வாங்கிய நிலையில், தற்போது விஸ்தாரா நிறுவனத்தை ஏர் இந்தியாவுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, ஏர் இந்தியா சிஇஓ கேம்பெல் வில்சனும், விஸ்தாரா சிஇஓ வினோத் கண்ணனும் நேற்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.