காங்கிரசின் தேச விரோத சிந்தனை நாட்டுக்கே ஆபத்தானது என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் ஹிமாசல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிடும் அவர், வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கங்கனா ரனாவத்,
பெண்கள் ஒவ்வொரு துறையிலும் சாதிக்கின்றனர் என்றும், மண்டியில் ஒருகாலத்தில் பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற நிலையில், தற்போது இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கல்வித் துறை, அரசியல், ராணுவம் என அனைத்திலும் முத்திரை பதிப்பதாக குறிப்பிட்டார்.