மக்களவைத் தேர்தலில் பாஜக வென்று தொடர்ச்சியாக மூன்றாவது முறை ஆட்சியமைத்ததும் ஜி7 மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில்,
இத்தாலியில் உள்ள புகலியா நகரில் ஜூன் 13 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பங்கேற்குமாறு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தமக்கு அழைப்பு விடுத்ததாகவும், அந்த வகையில் தேர்தலில் வென்றதும் அதில் பங்கேற்கவுள்ளதாகவும் கூறினார். ஜி7 கூட்டமைப்புக்கு நடப்பாண்டு இத்தாலி தலைமை வகிப்பது குறிப்பிடத்தக்கது.