தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91 புள்ளி ஒன்று ஏழு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அதன் இயக்குநர் சேதுராம வர்மா 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
அதன்படி, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91 புள்ளி ஒன்று ஏழு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், மாணவிகள் 94 புள்ளி ஆறு ஒன்பது சதவீதமும், மாணவர்கள் 87 புள்ளி இரண்டு ஆறு சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களை விட மாணவிகள் ஏழு புள்ளி நான்கு மூன்று சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
96 புள்ளி இரண்டு சதவீத தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் 95 புள்ளி ஐந்து ஆறு சதவீதமும், திருப்பூர் மாவட்டம் 95 புள்ளி இரண்டு மூன்று சதவீதமும் பெற்று 2-வது மற்றும் 3-வது இடத்தைப் பிடித்துள்ளன.