மத்திய டெல்லியில் உள்ள தரிபா கலான் பகுதியில் நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திரிபா கலன் பகுதியில் செயல்பட்டு வந்த நகைக்கடையை அதன் உரிமையாளர் வழக்கம் போல் திறக்கச் சென்றபோது, சுவர் துளையிடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், கைரேகை நிபுணர்களை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது பக்கத்து கடையில் திருட முயன்ற கொள்ளையர்கள் அங்கிருந்து நகைக் கடையை துளையிட்டு உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளது.