உதகையில் கோடை சீசனையொட்டி, படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரியில், குளுகுளு சீசனை அனுபவிக்க, சுற்றலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கடந்த 10ம் தேதி முதல் உதகையில் மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி துவங்கிய நிலையில், உதகை படகு இல்லத்திலும் சுற்றலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலாப் பயணிகளின் ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளது.