சென்னை மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் முதல் இரண்டாம் போட்டிகளுக்கான Exclusive டிக்கெட்டுகள் விற்பனை வரும் மே 14ஆம் தேதியும், முதற்கட்ட டிக்கெட்டுகள் விற்பனை 15ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கான Exclusive டிக்கெட்டுகள் 20ஆம் தேதியும், முதற்கட்ட டிக்கெட்கள் 21ஆம் தேதியும் விற்பனை செய்யப்படும் எனவும் பிசிசிஐ நிறுவனம் அறிவித்துள்ளது.