புதுச்சேரியில். நெருநாய் கடித்ததில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
நெல்லிதோப்பு சுப்ரமணி கோயில் வீதியில், வாகனம் மோதி குட்டி நாய் உயிரிழந்தது. இதனால் தாய் தெருநாய், அப்பகுதியில் வருவோரை துரத்துவது வாடிக்கை கொண்டுள்ளது.
இந்நிலையில், கர்த்திகேயன், சிவா, டான் பஹதூர், கண்ணன், மீனா உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்டவர்களை அந்நாய் கடித்துள்ளது.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தெருநாயை நகராட்சி விரைந்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.