பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி தாக்கலான மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் பேசுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அவர் தேர்தலில் போட்டியிட ஆறு ஆண்டுகள் தடை விதிக்கக் கோரியும் ஃபாத்திமா என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் எஸ்.சி. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற ரிட் மனுக்களைப் பொறுத்தவரை முதலில் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியை நாட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
நீதிமன்றத்தை நாடுவதற்கு பதிலாக தேர்தல் அதிகாரியிடம் முறையிடுமாறு கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.