அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலம் மோட்டார் வாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்ய வேண்டாம் என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது.
சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தீப்பற்றும் விவகாரம் குறித்து, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், அங்கீகரிக்கப்படாத அல்லது தகுதியில்லாத நிறுவனங்களால் மோட்டார் வாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்வதால் தீ விபத்துக்கள் நிகழ்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின்படி குற்றம் என்பதால், வாகன உரிமையாளர்கள் இவ்வகையான செய்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.