திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பொதுமக்கள் போராட்டத்தின் எதிரொலியாக டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம் – பாபநாசம் நெடுஞ்சாலையில் வார சந்தை எதிரே செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபான கடையால் பலரும் அவதிப்பட்டு வந்தனர்.
இதனையடுத்து இந்த கடையை நிரந்தரமாக மூடக் கோரி, கடந்த மார்ச் 19ஆம் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில், டாஸ்மாக் மதுபானக் கடையை மூடும் வகையில் அங்கிருந்த மது பாட்டில்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.