பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள், மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்தார்.
இதுதொடர்பான வழக்கிலிருந்து, ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோரை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவியின் தாயார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 16-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ப.பா.மோகன், வழக்கில் இருந்து நீக்கப்பட்ட இரு ஆசிரியைகளையும் மீண்டும் சேர்க்க வேண்டும் என வாதிட்டார்.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவசந்திரன், மனுவிற்கு பதிலளிக்க கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது, வழக்கை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.