மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்நிலையில் சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கோடை வெயிலில் வாடிய பயிர்களுக்கு இந்த மழை உயிர்கொடுத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.