ராஜஸ்தான் மாநிலத்தில் மின் தூக்கி செயலிழந்து சுரங்கத்திற்குள் 15 பேர் சிக்கிக் கொண்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் Jhunjhunu மாவட்டத்திலுள்ள கோலிகன் பகுதியில், ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் தாமிரச் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. கொல்கத்தாவிலிருந்து வந்த லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள், சுரங்க அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் நேற்று இரவு இச்சுரங்கத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது மின்தூக்கி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர், 2 ஆயிரம் அடி ஆழத்தில் சுரங்கத்தில் சிக்கிக்கொண்டனர். மாநில பேரிடர் மீட்புப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அனைவருக்கும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் ஜெய்ப்பூரிலுள்ள மணிபால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.