ஆந்திர மாநிலம் யூரிவாரிபாளையம் அருகே, டிப்பர் லாரியும், தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன் தினம் நடைபெற்றது. பாலநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பலர் ஹைதராபாத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், தேர்தலை ஒட்டி சொந்த ஊருக்குச் சென்று வாக்களித்தனர்.
சொந்த ஊருக்குச் சென்ற மக்கள், தனியார் பேருந்தில் ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருந்தனர். யூரிவாரிபாளையம் அருகே சென்ற போது, எதிரே வந்த டிப்பர் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில், டிப்பர் லாரியும், பேருந்தும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த விபத்தில், 2 வாகனங்களின் ஓட்டுனர்கள் உள்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் பயணிகள் அளித்த தகவலின்படி, ஓட்டுநர்கள் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.