இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற சிறுகதை எழுத்தாளரான ஆலிஸ் மன்ரோ காலமானார்.
கனடாவின் ஒன்டாரியோ போர்ட் ஹோப்பைச் சேர்ந்த ஆலிஸ் மன்ரோ 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகளை எழுதி வந்தார். அவரது கதைகளில் காணப்படும் நுண்ணறிவு மற்றும் இரக்கத்திற்காக மன்ரோ பெரும்பாலும் ரஷ்ய எழுத்தாளர் அன்டன் செக்கோவுடன் ஒப்பிடப்பட்டார்.
Dance of the Happy Shades, The Love of a Good Woman உள்ளிட்ட புகழ்பெற்ற புத்தகங்களை எழுதிய ஆலிஸ் மன்ரோ, கடந்த 2013-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்நிலையில் ஆலிஸ் மன்ரோ தனது 92-வது வயதில் போர்ட் ஹோப்பில் உள்ள வீட்டில் காலமானார்.