நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் பிரபீர் புரக்யஸ்தாவை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சீனாவிடம் இருந்து நிதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், நியூஸ் க்ளிக் இணையதளத்தின் நிறுவனர் பிரபீர் புரகாயஸ்தா கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிரபீர் புரக்யஸ்தாவை கைது செய்ததும், சிறையில் அடைத்தது செல்லாது எனத் தீர்ப்பளித்தது.