ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பெண் எம்.பியே அக்கட்சியில் பாதுகாப்பாக உணரவில்லை என பாஜக நிர்வாகி ஷைனா விமர்சித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்றிருந்த போது, அவரது தனி உதவியாளர் தன்னை தாக்கியதாக, அக்கட்சியின் பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் புகார் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பேசியுள்ள பாஜக முக்கிய நிர்வாகி ஷைனா, ஸ்வாதி மாலிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் எப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என விரும்புவதாகவும், பெண்களின் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசும் ஆம் ஆத்மி கட்சியிலேயே இந்நிகழ்வு அரங்கேறியுள்ளதாகவும் விமர்சித்தார்.