செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்க ஒரே நேரத்தில் ஏராளமானோர் முயன்றதால், சென்னை மாநகராட்சியின் இணையதளம் முடங்கியது.
செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதை சென்னை மாநகராட்சி கட்டாயமாக்கியுள்ள நிலையில், கடந்த ஒரே வாரத்தில் 7 ஆயிரத்து 883 பேர் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர். இதில், உரிய ஆவணங்கள் இல்லாததால் 4 ஆயிரத்து 168 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஒரே நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்ததால், சென்னை மாநகராட்சியின் இணையதளம் முடங்கி பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.