தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பத்திரகாளி அம்மன் கோயிலில் பூசாரி முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்று ஆசிப்பெற்றனர்.
புங்கவர் நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழா இந்தாண்டும் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது விழாவின் முக்கிய நிகழ்வாக கருவை முள், உடைமுள், இலந்தை முள், கத்தாழை முள், உள்ளிட்டைவற்றை கொண்டு அமைக்கப்பட்ட முள் படுக்கையில் பூசாரி படுத்து அருள் வாக்கு கூறினார்.