திண்டுக்கல் மாவட்டம், அம்மைய நாயக்கனூர் சுற்றுப்புற பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் அம்மைய நாயக்கனூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது . இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.