ஆந்திர பிரதேசத்தில் முன்னாள் அமைச்சரின் பாதுகாவலரை கார் ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நந்த்யாலா மாவட்டம் அல்லகடாவில் முன்னாள் அமைச்சர் பூமா அகிலா பிரியாவின் வீட்டு முன் அவரது பாதுகாவர் நிகில் நின்று கட்சியினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், நிகில் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
இதில் லேசாக காயமடைந்த அவர், எழுந்து நடக்க முயன்றதும் காரில் இருந்து இறங்கி வந்த 3 பேர் அவரை கொலை செய்ய முயன்றனர். இதனால் சுதாரித்துக் கொண்ட நிகில், அகிலா பிரியாவின் வீட்டுக்குள் நுழைந்து உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.