தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே பெண்ணை ஆபாசமாக சித்தரித்து வலைதளத்தில் வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
செல்லபிள்ளையார்குளத்தைச் சேர்ந்த சிவமுருகன், சென்னையில் உள்ள நகைக் கடையில் காசாளராக பணிபுரிந்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் பழகி வந்த நிலையில் வீடியோ காலில் பேசிய வீடியோவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் சிவமுருகன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.