அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர இதுவரை 1 லட்சத்து 81 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டில் சேர மே 6 முதல் 15-ம் தேதி வரைம் 1 லட்சத்து 81 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
மே 20-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் தரப்பட்டுள்ளது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், அவர்கள் பதிவு செய்த ஒவ்வொரு கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் மே 24-ம் தேதி அனுப்பப்படுகிறது.
அதனைத் தாெடர்ந்து மே 28 முதல் 30-ம் தேதி வரையில் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்டோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.
முதல் சுற்று கலந்தாய்வு ஜூன் 10 முதல் 15-ம் தேதி வரையிலும், இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஜூன் 24 முதல் 29-ம் தேதி வரையிலும் நடத்தப்படுகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3 ந் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.