இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கான வாய்ப்பை, இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமண் மறுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. பதவி நீட்டிப்பை ட்ராவிட் மறுத்ததாகத் தகவல் வெளியான நிலையில், புதிய பயிற்சியாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது யார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ள ஸ்டீபன் ஃப்ளெமிங், இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.